இனம் படத்தில் நடித்து அசத்திய மனவளர்ச்சி குன்றிய சிறுவன்!!

No comments
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவனும் ஒருவர். தற்போது அவர் 'இனம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இனம் படம் என்ன தான் இலங்கை தமிழர் பற்றிய படமாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு காதல், சென்டிமெண்ட், அனல் பறக்கும் போர் என்று எல்லா விஷயங்களையும் சேர்த்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்தப்படத்தில் சென்னையை சேர்ந்த கரண் என்ற 17வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவர் நடித்திருக்கிறார் என்றும் சொல்ல முடியாது, நடிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்ல முடியாது. 
அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். கரணிடம், இயக்குநர் கதை சொல்லி விளக்க முடியாது அதனால் செய்கையால் அந்த கதாபாத்திரத்தை விளக்கி சொல்லி, கேமராவை ஸ்டார்ட் பண்ண சொல்லி அவரிடம் இருந்து நடிப்பை வரவழைத்து, அவர் செய்யும் அசைவுகளை வைத்து படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன்.
இனம் படம் வெளிவரும்போது ஒரு பக்கம் அவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கும், மற்றொரு பக்கம் கண்ணீரையும் வரவழைக்கும் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழ் சினிமாக்களில் எத்தனையோ சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள், ஆனால் கரணின் நடிப்பை பார்த்து அனைவரும் சல்யூட் அடிப்பார்கள் என்று கூறுகிறார் இப்படத்தை வெளியிடும் லிங்குசாமி.

No comments :

Post a Comment