பிரணிதா தமிழ்ப்படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன் தெரியுமா?

No comments
பெங்களூருவைச் சேர்ந்த கன்னட நடிகையான பிரணிதா, கார்த்தி நடித்த சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தற்போதைய நடிகைகளோடு ஒப்பிடுகையில் சந்தேகமில்லை… பிரணிதா பேரழகிதான்! ஆனாலும் சகுனி படத்துக்குப் பிறகு தமிழில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. தெலுங்கு, கன்னடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரணிதா தமிழ்ப்பக்கம் வராமலே இருக்கிறார். சகுனி படத்தின் தோல்வியின் காரணமாக ராசியில்லாத நடிகை என்று அவர் மீது முத்திரை குத்திவிட்டார்களா? அதுதான் இல்லை.. சகுனி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரணிதாவின் பேரழகு ப்ளஸ், சகுனி படத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக, பிரணிதா உடன் ஒரு கான்ட்ராக்ட் போட்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா.
 சகுனி படத்துக்குப் பிறகு அடுத்த 3 படங்களையும் தன் நிறுவனத்துக்கே நடிக்க வேண்டும் என்பதுதான் அவர் போட்ட அக்ரிமெண்ட். சகுனி படு தோல்வியடைந்ததால் பிரணிதாவை வைத்து தொடர்ந்து படம் எடுக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டாராம் ஞானவேல் ராஜா. அதேசமயம், அவருடன் போட்ட கான்ட்ராக்ட்டை கேன்சல் செய்யாமலும் இழுத்தடிக்கிறாராம். பெங்களூருவிலிருந்து சென்னை வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஞானவேல்ராஜாவை சந்தித்தும் அக்ரிமெண்ட்டை கேன்சல் செய்ய மறுக்கிறாராம். பிரணிதா தமிழ்ப்படங்களில் நடிக்காமல் இருப்பதன் பின்னணி இதுதான்.

No comments :

Post a Comment