சந்தானம் படத்தில் சோலார் ஸ்டார்!

No comments
காமெடியன் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீ-மேக். நான் ஈ புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி இருந்தார். தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஹீரோவாக நடித்திருந்தார். அதே கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அன்ஹா சவேரி என்ற புதுமுகம் நடிக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவர் ஸ்டாரை நடிக்க வைத்து கலாய்த்து எடுத்து காமெடி பண்ணினார். அது சூப்பராக ஒர்க் அவுட் ஆனது. அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு அம்சத்தை சேர்த்திருக்கிறார். 
 அதாவது இதில் பவர் ஸ்டாருக்கு பதில் சோலார் ஸ்டாரை நடிக்க வைத்து கலாய்க்கிறார். சோலார் ஸ்டார் தேயானியின் கணவர் ராஜகுமாரன். இவருக்கு பவுடர் ஸ்டார் என்ற பட்டப்பெயரும் உண்டு. படத்தில் ராஜகுமாரனுக்கு முக்கியமான கேரக்டர்.
படமுழுக்க சந்தானத்துடன் வருகிறார். சந்தானம் அவரை வாரு வாருன்னு வாருவார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போகும் ராஜகுமாரன் “காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பார்த்திருப்ப, கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பார்த்திருக்கியா”ன்னு கேட்பார் அந்த அளவுக்கு இருக்குமாம் சோலார் ஸ்டாரின் ரவுசு.

No comments :

Post a Comment