காதலில் சிக்கிக் கொண்ட கேரள நாட்டிளம் பெண்களுடனே நாயகன்
கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்தவர் நாயகன் அபி சரவணன். இப்படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.குமரன்.
தற்போது இப்படம் வெளிவரும் சூழ்நிலையில் உள்ளது. இப்படத்தில் நடிக்கும் போது அபி சரவணனுக்கும், காயத்ரிக்கும் காதல் ஏற்பட்டதாம். இருவரும் நன்றாக பழகி வருகிறார்களாம். தற்போது காயத்ரி, எஸ்.எஸ்.குமரன் இயக்கியத்தில் வேறொரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அதற்கு அபி சரவணன் உதவி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் தங்களின் வருங்காலம் பாதிக்கும் என்றும், வளர்ந்து வரும் நாங்கள் நிறைய சாதிக்க வேண்டும் என்றும் நினைத்து தன் காதல் விஷயத்தை மறைத்து வருகிறார்களாம் அபி சரவணனும் காயத்ரியும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment