கோச்சடையான் படத்துக்கு யு சான்று
ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. டிரெய்லரும் வந்துள்ளது. இதனை லட்சக் கணக்கானோர் இணைய தளங்களில் பார்த்துள்ளனர்.
‘கோச்சடையான்’ தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படம் பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதன் மூலம் அரசின் வரி விலக்குக்கு தகுதி பெற்றுள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று யோசிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடு கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வருகிறது.
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாக கோச்சடையான் தயாராகியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment