ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் திரிஷா இல்லைன்னா நயன்தாரா

No comments
பல படங்களுக்கு இசையமைத்து வெற்றிப்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். இவர் ‘பென்சில்’ படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் அட்டிக் இப்படத்தை டைரக்டு செய்கிறார். இவர் சொன்ன டைட்டிலும், ஒன் லைன் கதையும் ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்து போக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். ‘பென்சில்’ படம் முடிந்ததும் ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment