அடியாட்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை: சிவகார்த்திகேயன்

No comments
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழாவிற்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தபோது ‘பவுன்சர்கள்’ என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள். இதனால் அடியாட்களுடன் வந்த சிவகார்த்திகேயன் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
 இதற்கு மறுப்பு தெரிவித்து, தனக்கும் அடியாட்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெற்றியடைந்ததையொட்டி இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், அடியாட்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் என்று கூறினார். 
இதைப்பற்றி படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்கும் போது, விழாவிற்கு நிறைய பிரமுகர்கள், ரசிகர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவே இவ்வாறு ஏற்பாடு செய்தேன். ஆனால் அது வேறுமாதிரியாக மாறிவிட்டது. இனிமேலும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். மேலும் சிவகார்த்திகேயனிடம், ஹன்சிகாவின் காதல் தோல்விக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா என்று கேட்டதற்கு, இது அவர்களுடைய தனிப்பட்ட விசயம். நான் எப்படி தலையிடுவது? என்று பதில் அளித்தார். 
 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, ‘பாடல்கள் வெற்றியடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் பாடல்களை கேட்டு பலர் பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்’ என்றார்.

No comments :

Post a Comment