7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் நடிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ..!
சிம்பு – ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது. இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்தநிலையில் சிம்பு புண்ணியத்தில் வாலு அறுந்துவிட்டது.
இந்தப் படத்துக்காக கடந்த மூன்று வருடங்களாக ராத்திரி பகல் பாராமல் உழைப்பைக்கொட்டிய புதுமுக இயக்குநர் விஜய் சந்தரை, தயாரிப்பாளரும் நினைத்துப்பார்க்கவில்லை. படத்தின் நாயகனான சிம்புவும் அவரைப்பற்றி யோசிக்கவில்லை.
வாலு படத்தை நம்பி உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு, அடுத்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் விஜய்சந்தர். இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருடன் 7 கதாநாயகிகளும், 7 கதாநாயகன்களும் நடிக்கின்றனர். நயன்தாரா, நஸ்ரியா, சுவாதி, சன்னிலியோன், ப்ரியா ஆனந்த ஆகிய நடிகைகளும் 7 கதாநாயகிகளில் அடக்கமாம். 7 கதாநாயகன்களில் சிம்பு, ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, மிர்ச்சி சிவா ஆகியோரும் உண்டு.
நாகராஜா சோழன், கங்காரு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். ஒரு ஹீரோவை வச்சு படம் எடுக்கிறதே கஷ்டம். விஜய் சந்தரோ 7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் வச்சு படம் எடுக்குமளவுக்கு துணிந்துவிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment