அஞ்சான் படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடும் ஆண்ட்டி நடிகை!
லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது. மும்பைக்கு அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடல்காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.
யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி…சில்க் ஸ்மிதா என் கம்யூனிட்டி என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு சூர்யா உடன் குத்தாட்டம் போட்டிருப்பவர் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங்.
2003 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் சித்ரங்கதா, கடந்த 10 ஆண்டுகளில் நடித்தது வெறும் எட்டே படங்கள்தான். அவற்றில் தேஸி பாய்ஸ் என்ற படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு ஜோடி.
அந்தப் படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் சித்ரங்கதா. தவிர ஏர்டெல் உட்பட ஏராளமான விளம்ரபடங்களிலம் நடித்தவர் இவர்.
முக்கியமான விஷயம்…சித்ரங்கதாவுக்கு திருமணமாகிவிட்டது. உலகின் டாப் 100 கோல்ஃப் விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஜோதி சிங் என்பவரை 2005 ஆம் ஆண்டில் மணந்து, கடந்த ஆண்டு விவாகரத்து செய்தவர்.
லிங்குசாமி ஸார்.. அஞ்சான் படத்தில் ஒரு ஆண்ட்டியை அயிட்டம் டான்ஸ் ஆட வச்சிருக்கீங்களே..ஞாயமா ஸார்..!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment