அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்!

No comments
நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்! வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்… அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பும்.. அடுத்தடுத்து அவர் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களும்… இப்படி பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்ததினால், திரையுலகில் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்த்து ஜிவ்வென உயர்ந்து கொண்டே இருக்கிறது. 
எந்தளவுக்கு? சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நாலரை கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து வரும் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஒன்பது கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் டானா படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை.
 அதற்குள் அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பதிமூணு கோடிக்கு விற்று, காசை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டார் டானா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ். இந்த அசுரத்தனமான வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு தலையில் வெயிட்டை ஏற்றாமல் இருக்கணும்..!

No comments :

Post a Comment