குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய பிரபல படத்தயாரிப்பாளர்!
ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம்.
அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை.
இன்று வெளியாகி இருக்கும் குக்கூட படம் அருமையாக இருக்கிறது என்றும், படம் வெற்றியடைவது உறுதி என்றும் ரசிகர்கள் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் ஒருவர் கடும் சோகத்தில் இருக்கிறாராம்!
அவர்..நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. அது சரி.. குக்கூ ஹிட்டானால் இவருக்கு என்ன?
சில வருடங்களுக்கு முன் தன் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு பூஜைபோட்டார் சக்கரவர்த்தி.
18 வயசு என்ற படத்தை ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்திலும், சந்திரபாபு என்ற படத்தை லிங்குசாமியின் உதவியாளரான ராஜுமுருகன் என்ற புதுமுக இயக்குநரை வைத்தும் தொடங்கினார்.
18 வயசு படம் 2012 ஆம் வருடம் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பி நடைபெற்றநிலையில் சந்திரபாபு படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் சக்கரவர்த்தி. அதற்கு அவர் சொன்ன காரணம்..
அந்த டைரக்டருக்கு படம் எடுக்கத் தெரியலை என்பதுதான்.
அன்று அவரால் படம் எடுக்கத் தெரியலை என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜுமுருகன்தான் இன்றைய குக்கூ படத்தின் இயக்குநர். இந்த ப்ளாஷ்பேக்கின் காரணமாகவே குக்கூ படத்தின் வெற்றி எஸ்.எஸ். சக்கரவர்த்தியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.
மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க மக்களே!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment