கோலிவுட் நடிகைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த லேனா!
கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு ஓய்ந்து போவார்கள். அல்லது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார்கள்.
ஆனால், கேரக்டர் நடிகைகள் அப்படியல்ல. நடை தள்ளாடும் காலம் வரை நடித்துக்கொண்டேயிருப்பார்கள். முதலில் அக்கா, அண்ணி என தொடருபவர்கள், பின்னர் அம்மா வேடத்தில் நடித்து ஸ்டெடியாகி விடுவார்கள்.
அப்படி மலையாளத்தில் சிறந்ததொரு கேரக்டர் நடிகையாக திகழ்ந்து வருபவர்தான் லேனா. அங்கு ஏராளமான படங்களில் நடித்தவர். மலையாளத்தில் வெளியான டிராபிக் படத்தில் ரகுமானின் மனைவியாக இவர்தான் நடித்திருந்தார்.
இவர் நடித்த வேடத்தில்தான் அப்படம் தமிழில் சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் ரீமேக்கானபோது ராதிகா நடித்தார்.
ஆக, அங்கு இப்போதும் முக்கிய நடிகையாக விளங்கும் லேனா, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அனேகன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதிக்கக்கூடியவர் லேனா என்பது பெரும்பாலான நடிகைகளுக்கு தெரியும் என்பதால், இவரது வருகை, கோலிவுட்டின் கேரக்டர் நடிகைகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment