சந்தானத்தை பின்தள்ளிய பரோட்டா சூரி!

No comments
வடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடிகளைக் கொண்டே முன்னணி காமெடியன் ஆனவர் சந்தானம். அதோடு சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா, இது கதிர்வேலன் காதல் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது. 
மாறாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் என சூரி நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக சந்தானத்தின் படக்கூலி ஹீரோக்களையே மிஞ்சும் வகையில் எகிறி நிற்பதும் ஒரு முக்கிய காரணமாகியிருக்கிறது. இதனால், அஞ்சான் படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணயிருந்தவர்கள் கடைசி நேரத்தில் சூரியை புக் பண்ணி விட்டனர். இதனால் சந்தானத்தின் வாய்ப்பை கைப்பற்றி அவரை பின்தள்ளியிருக்கிறார் சூரி.

No comments :

Post a Comment