3 கோடிக்கு, 3 கோடி லாபம்! – படத்தயாரிப்பாளர்களுக்கு ஆசை காட்டும் பா.விஜய்..!

No comments
பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார். அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் எடுக்கவும் யாரும் தயாராக இல்லை. இந்த யதார்த்தம் பா.விஜய்க்கு தெரியுமோ தெரியாதோ…பிரபல படநிறுவனங்களை அணுகி தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும்படி வாய்ப்புக் கேட்கிறார். அப்படி கேட்கும்போது, தன்னை வைத்து 3 கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தால், அந்தப் படத்தை 6 கோடி ரூபாய்க்கு நானே பிசனஸ் பண்ணித் தருகிறேன் என்றும் ஆசை காட்டுகிறாராம். 
 அதோடு, தன் உறவுக்காரர்கள் பல பேர் கல்லூரிகள் நடத்தி வருவதாகவும், அந்தக் கல்லூரிகளில் இலவசமாக மெடிகல், இன்ஜினியரிங் சீட் வாங்கித்தருவதாகவும் ஆஃபர் வேறு கொடுக்கிறாராம். இப்படி எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு ஆசைகாட்டியும், ஆஃபர் கொடுத்தும் பா.விஜய்யை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. 
எனவே அவரே 1 சிடி முப்பது ரூவா என்ற படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். தன் பேனரில் இல்லாமல் வேறு பேனரில் தயாராகி வரும் 1 சிடி முப்பது ரூவா படத்தின் புரடக்ஷன், பப்ளிசிட்டி, பிசனஸ் என அனைத்து விஷயங்களையும் பா.விஜய்தான் கவனித்து வருகிறாராம்.

No comments :

Post a Comment