அபிமான இயக்குனர்களுடன் மீண்டும் இணையும் ஆர்யா!

No comments
தற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, மகிழ் திருமேனியின் மீகாமன் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஆர்யா. இந்த படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடிப்பதால், இதற்காக சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று பாடியை ஒர்க்அவுட் பண்ணி நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்து கொண்டிருப்பதால், சில படங்களில் நடிக்க கதை கேட்டும், அவற்றின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார் ஆர்யா. மேலும், அப்படி அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு மொத்தம் மூன்று கதைகளை செலக்ட் பண்ணி வைத்திருக்கிறார். 
அந்த மூன்று படங்களையுமே ஆர்யாவின் அபிமானத்திற்குரிய சில டைரக்டர்கள்தான் இயக்குகிறார்களாம். அதாவது, ஆர்யாவை வைத்து சர்வம், ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் ஆகியோர்தான் அந்த படங்களை இயக்கப்போகிறவர்களாம். 
 அதோடு, இவர்கள் இயக்கிய படங்கள் எல்லாமே ஆர்யாவுக்கு ஹிட்டாக அமைந்தன. அதனால், கைவசமுள்ள படங்களை முடித்து விட்டு அப்படங்களில நடிப்பதில் அதிக ஆவலாக இருக்கிறாராம் ஆர்யா

No comments :

Post a Comment