அஜீத்துக்கு பயிற்சி கொடுக்கும் ஷாரூக்கான் டிரெய்னர்

No comments
ஒரு காலத்தில் தமிழில் நடித்தவர்கள்(ஒரு சிலரை தவிர) மழைக்குகூட ஜிம் பக்கம் ஒதுங்காதவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் பாலிவுட்டை பின்பற்றத் தொடங்கியபிறகு, சில ஹீரோக்கள் சிக்ஸ்பேக் போன்ற ரிஸ்க் எடுக்கவும் தொடங்கினர். சூர்யா, சிம்பு, விஷால, தனுஷ் என கோலிவுட்டின் சிக்ஸ்பேக் பட்டியல் நீளத் தொடங்கியது. இந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தற்போது அஜீத்தும் தனது உடம்பை குறைத்து 8 பேக்கிற்கு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஏற்கனவே பலமுறை விபத்துக்களில் சிக்கியவர் என்பதோடு, அஜீத்துக்கு முதுகு தண்டுவடத்தில பிரச்னை இருப்பதால், தற்போது ஒரு பாலிவுட் ஜிம் டிரெய்னரை அழைத்து வந்து முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார் அஜீத்.
 அந்த நபர் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராம். அஜீத் சரியான பயிற்சியாளர் தேடிவந்ததை அறிந்த ஷாரூக்கானே, தனது பயிற்சியாளரை அஜீத்துக்காக அனுப்பி வைத்திருக்கிறாராம். ஆக, பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு இணையாக இப்படத்தில் அஜீத்தும் பெரிய பாடி பில்டராக களமிறங்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.

No comments :

Post a Comment