டைரக்டர் பாலா மீது மவுனிகா பாய்ச்சல்
டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார்.
மவுனிகா கூறியதாவது:–
டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான் வற்புறுத்தினேன். பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.
பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட பந்தம் இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று டைரக்டர் பாலா தடுத்தார். நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது.
பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நான் சென்றால் என்னை அடித்து விரட்டவும் ஆட்களை நிறுத்தி இருந்தார்.
பாலா விதித்த தடையை மீறி என் கணவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த டைரக்டர் பாரதிராஜா உதவி செய்தார். எனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு தவறானதாக இருந்து இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போதே என்னை பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிக்க பாலா முயற்சி செய்து இருக்கலாமே.
இவ்வாறு மவுனிகா கூறினார்.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment