தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகைக்கு தீவிர சிகிச்சை

No comments
தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை விந்தியா தொடர்ந்து மயக்க நிலையில் இருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். விந்தியா பல கன்னட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் உள்ள காமாட்சி பாளையா பகுதியில் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் மஞ்சுநாத் என்ற இளைஞருடன் சேர்ந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் வீட்டில் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் திடீரென அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். 
70 தூக்க மாத்திரைகளை அவர் சாப்பிட்டதாக தெரிகிறது. மயங்கி விழுந்த அவரை பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் விந்தியா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. கோமாவிலேயே இருக்கிறார். 
அவர் உயிரை காப்பாற்ற டாக்டர் குழுவினர் போராடுகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். மஞ்சுநாத்தை விசாரித்த போது அவர் விந்தியாவின் காதலர் என தெரிய வந்தது. இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுள்ளனர். இதுவே வித்யாவை தற்கொலை முயற்சிக்கு தூண்டியுள்ளது.

No comments :

Post a Comment