பாலாவின் பரதேசி கெட்டப்பில் ஆதிவாசி படம்!

No comments
வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். பெரியாரிச கொள்கை அடிப்படையில் உருவான அப்படம் கோலிவுட்டின் பெரும்பாலான படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் வெளியானபோது சரியானபடி படம் மக்களை சென்றடையவில்லை. பின்னர் அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர். அதையடுத்து, ஒன் என்ற பெயரில் ஒரு படத்தை தொடங்கினார் சங்ககிரி ராஜ்குமார். படத்தில் ஒரேயொருவர் மட்டும் நடிக்கும் கதை. அந்த ஒருவரும் அவரே. அதோடு படத்திலுள்ள மொத்த பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டதால் அந்த படத்தை அவரால் இன்னமும் முடிக்கமுடியவில்லை. இந்த நிலையில. இப்போது நெடும்பாறைகள் என்றொரு படத்தை இயக்கியுள்ளார்.
 சேலம் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தில் காட்டுவாசிகளின் வாழ்க்கையை முறையை பதிவு செய்துள்ளாராம் ராஜ்குமார். காடே கதியென்று வாழும் மனிதர்கள் நகரத்துக்கு வந்தபோது படும் அவஸ்தைகளையும் சொல்லியிருக்கிறாராம். பெரும்பாலான காட்சிகள் காட்டுப்பகுதியிலேயே நடத்தப்பட்டதால் 6 லட்சம் செலவில் காட்டுக்குள் செட் அமைத்தும் படமாக்கினாராம்.
 மேலும், இப்படத்தில் நடித்த அனைவருக்கும் காட்டுவாசிகள் அணிவது போன்ற ஆடைகளையே பயன்படுத்தியிருக்கும் ராஜ்குமார், அவர்களை பரதேசி படத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பாலா மொட்டையடித்து விட்டது போன்ற கெட்டப்பில் நடிக்க வைத்துள்ளாராம். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர், விரைவில் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

No comments :

Post a Comment