ரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்!

No comments
ராணா படத்தின் பூஜை அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ரஜினியை இரண்டு ஆண்டுகள் வரை கடினமான கதைகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்காரணமாகவே இந்த இடைவெளியில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இப்போது அப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவும் தயாராகி விட்டது. இந்தநிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
மேலும், தீபிகா படுகோனே அல்லது இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை நடிக்கயிருக்கும் இப்படத்தில், நான்ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் வில்லனாக நடிக்கிறாராம். ஏப்ரலில் கோச்சடையான் திரைக்கு வந்தபிறகு மே மாதத்தில் ரஜினி-கே.எஸ்.ரவிக்குமார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

No comments :

Post a Comment