இசையமைப்பாளரான நடிகர் மனோஜ்!

No comments
தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மனோஜ். அதன்பிறகு சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. அதனால், ஒரு கட்டத்தில், கமலை வைத்து பாரதிராஜா ஏற்கனவே இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யப்போவதாக சில முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வந்தார். ஆனால், அவரை நம்பி யாரும் கால்சீட் கொடுக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்குப்பிறகு பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்தார். 
அதன்பிறகு ஒரு என்ட்ரி கிடைக்கும் என்று நினைத்த மனோஜை, அப்படத்தின் தோல்வி மீண்டும் சறுக்கி விட்டது. அதனால், இப்போது இசையில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் மனோஜ். காதல் ஓவியம் என்ற பெயரில் ஒரு ஆல்பத்துககு இசையமைத்திருக்கிறார். மெலடி, அதிரடி என 5 மாறுபட்ட பாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாம். விரைவில் இந்த ஆல்பத்தை வெளியிட ஏற்பாடு செய்து வரும் மனோஜ், அதன்பிறகு சினிமாவில் இசையமைப்பாளராக பிரவேசிக்கிறாராம்.

No comments :

Post a Comment