நயன்தாராவை அட்டாக் பண்ணும் ஹன்சிகா!
சிம்பு-ஹன்சிகா காதல் முறிவுக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடிப்பதற்கு முன்பு வரை, ஹன்சிகாவுடன் அவரது காதல் ஆரோக்யமாகவே இருந்து வந்தது. ஆனால், எப்போது நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிக்கத் தொடங்கினாரோ அதிலிருந்து அவர்களது காதல் ஆட்டம் காணத் தொடங்கியது. ஆக, திரைக்குப்பின்னால் ஏதோ நடந்திருக்கிறது.
அதையடுத்து சிம்புவை சந்திப்பதையே தவிர்த்தார் ஹன்சிகா, ஆனால் இந்த செய்தி வெளியில் புகைந்தபோது, அவரை தேற்றும் விதமாக, நயன்தாரா எனது தோழி, ஆனால் ஹன்சிகா எனது காதலி என்று ஸ்டேட்மென்ட் விட்டார் சிம்பு. ஆனபோதும் அடங்கவில்லை ஹன்சிகா.
திடீரென்று ஒருநாள் காதலை முறித்துக்கொண்டு, இனி நான் தனி ஆள் -என்று டுவிட் செய்து உலகுக்கு காதல் முறிவை தெரியப்படுத்தினார்.
இந்த நிலையில், இப்போது எனக்கு எந்த கட்டுக்காவலும் இல்லை என்பதை மேல்தட்டு ஹீரோக்களுக்கு நேரடியாகவே தெரியப்படுத்தி புதிய படங்களில் வேகமாக கமிட்டாகி வருகிறார் ஹன்சிகா.
அதோடு, தனது காதல் முறிவுக்கு காரணமான நயன்தாராவுக்கும் அட்டாக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதாவது, அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு எந்தெந்த கம்பெனிகளிடம் பேசுகிறாரோ அந்த கம்பெனிகளுக்கு தானும் விசிட் அடிக்கிறாராம். அதோடு, நயன்தாராவை விட குறைவான கூலியில் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லி படங்களை தன் பக்கம் இழுத்து வருகிறாராம். இதனால், செகண்ட் இன்னிங்சில் இதுவரை போட்டி இல்லாத களத்தில் கம்பு சுற்றி வந்த நயன்தாரா, இப்போது ஹன்சிகா என்றொரு போட்டியாளர் உருவாகியிருப்பதால் அவரை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment