ஸ்டார் ஹோட்டலில் மீடியாக்களை பார்த்ததும் பதறி ஓடிய ஆர்யா-அனுஷ்கா!

No comments
இரண்டாம் உலகம்' படத்தில் நடித்தபோது ஆர்யா-அனுஷ்காவுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் அங்கு வந்திருந்த நடிகர்-நடிகையர் முன்னிலையிலும் உற்சாக ஆட்டம் போட்டனர். ஆனால், அதன்பிறகு தமிழில் படமில்லாததால் ஆந்திரா சென்றுவிட்ட அனுஷ்கா, ஆர்யாவை சந்திப்பதை நிறுத்தி விட்டதாக செய்திகள் பரவின. ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள ஹயாத் ஓட்டலில் கோச்சடையான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, அங்கு பிரஸ்மீட் நடக்கிற விசயம் தெரியாமல் அங்கு ஆர்யா-அனுஷ்கா இருவரும் ஜோடி போட்டபடி ஹோட்டலுக்குள் இருந்து வெளியே வந்தனர். 
இருவரும் ஷாட்ஸ், டீசர்ட் அணிந்திருந்தனர். அப்போது, மீடியாக்கள் ஹோட்டல் வாசலில் கூடிநிற்பதை பார்த்த அவர்கள் அதிர்ந்து போயினர். மீடியாக்கள் கண்ணில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, இருவரும் உஷாராகி, கைகோர்த்தபடி பார்க்கிங் ஏரியாவுக்குள் சென்று காரை எடுத்துக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டனர். ஆக, திருமணம் செய்து கொள்ள பெண் பார்ப்பதால் சமீபகாலமாக ஆர்யா பிக்கப் வேலைகளை விட்டு விட்டார்.
 நடிகைகளை அவர் ஏறெடுத்தே பார்ப்பதில்லை என்ற வெளியான செய்திகளையெல்லாம் நேரில் பார்த்த இந்த சம்பவம் பொய்யாக்கி விட்டது.

No comments :

Post a Comment