ரஜினியை சந்திக்கும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார்?
மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் 'கோச்சடையான்'. இதோ அதோவென்று அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 9-ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், தீபிகா படுகோனே, கே.எஸ்.ரவிக்குமார், டைரக்டர் செளந்தர்யா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டமிட்ட சோனி மியூசிக் இந்தியா நிறுவனமும், சோனி எரிக்சன் செல்போன் நிறுவனமும் இணைந்து ஒரு போட்டியை அறிவித்துள்ளன. அந்தப்போட்டி என்னவென்றால்
, சோனி நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ஆடியோக்களை அதிகம் டவுன்லோடு செய்யும் நபரை தேர்வு செய்து, மார்ச் 9-ந்தேதி நடைபெறும் கோச்சடையான் ஆடியோ விழாவில் ரஜினியை நேரில் சந்திக்கும வாய்ப்பை வழங்கப்போகிறார்களாம். இந்த தகவல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள் டவுன்லோடு போட்டியில் இறங்கி விட்டனர். ரஜினியை சந்திக்கப்போகும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார் என்பது மார்ச்-9-ந்தேதி தெரிந்து விடும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment