கதை கேட்பதை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!
குறுகிய காலத்திலேயே 25 படங்களுக்கு இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்நிலையில், தனது நண்பர் ஒருவருக்காக மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக தன்னிடம் கதை சொல்ல சுற்றிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களிடம், முதல் படமே தோற்று விட்டதால் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற மூடே போய் விட்டது என்று அவர்களை விரட்டியடித்து விட்டார்.
இந்தநிலையில், பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வரும் அவரை மனதில் கொண்டு கதை பண்ணிய மேலும் சில இயக்குனர்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால், பென்சில் என்ற ஒரு படத்தில் நடிக்க வந்ததால், நான் இசையமைக்க வேண்டிய சில முன்னணி டைரக்டர்களின் படங்கள் வேறு இசையமைப்பாளர்களுக்கு திரும்பி விட்டன. அதனால் பென்சில் படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன். அதனால் அப்படி நான் மீண்டும் நடிப்பதாக இருந்தால் உங்களையெல்லாம் அழைத்து கதை கேட்கிறேன் என்று அந்த டைரக்டர்களிடம் சொல்லி விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இதனால் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்து படம் தயாரிப்பார், நடிப்பார் என்று அவருக்காக கதை பண்ணிக்கொண்டு மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவர் தனது முடிவை வெளிப்படையாக சொல்லி விட்டதால், அதே கதைகளுடன் வேறு நடிகர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment