ஒரு சி.டி. முப்பது ரூபாய் - படத்தோடு தலைப்பு இது!

No comments
இன்றைக்கு சினிமாவில் இருக்கும் அநேக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படம்பற்றி சொல்லும் ஒரே வார்த்தை, இந்தப்படம் ரொம்ப புதுசு, இதுவரை எந்த இயக்குநரும் சொல்லாத கதை, இதுவரை சொல்லாத கதை, நாங்கதான் புதுசா சொல்கிறோம் என்று. ஆனாலும் நிஜமாலுமே ஒரு இயக்குநர் ஒரு புதுவித கதையை சொல்ல போகிறார். 
படத்தின் தலைப்பு ஒரு சிடி முப்பது ரூபாய். இந்த படத்தை பற்றி அறிமுக இயக்குநர் ராகேஷ் கூறுகையில், ஒரு படம் ரிலீசான சில நாட்களிலேயே அந்தப்படத்தின் திருட்டு விசிடி மற்றும் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிடுகிறது. சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எல்லோரும் சேர்ந்து போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு வெள்ளைத்தாளில் தன் மனதில் உள்ள வலிகளை எல்லாம் புகாராக கொடுக்கிறார்கள். 
அந்த எழுத்துக்களைத்தான் படமாக செதுக்கியிருக்கிறேன். அதான் ஒரு சிடி முப்பது ரூபாய் படத்தோட கதை. 4 பசங்க, ஒரு முக்கிய நபர் இவர்களை சுற்றித்தான் கதைக்களம் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment