த்ரிஷ்யம் ரீமேக் படத்துக்காக முட்டிமோதும் மாஜி ஹீரோயினிகள்!

No comments
விஸ்வரூபம்-2 பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்தபடியாக உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கி விட்டார். ஆரம்பத்தில் மூன்று டீன்ஏஜ் மகள்களுக்கு அப்பாவாக கமல் நடிப்பதாக சாதாரணமாக சொன்னர்கள். ஆனால், இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் டிசைன்களை வெளியிட்டதைப் பார்க்கும்போது, இதுவும் கமலின் சமீபகால படங்களின் வரிசையில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகயிருப்பதை உணர்த்துகிறது. ஆக, இப்படத்தைப்பற்றிய பரபரப்பபு செய்திகள் வெளியாகி வரும் இந்தநேரத்தில், அடுத்து த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாகவும் ஒரு செய்தி இன்னொரு பக்கம் பரவிக்கிடக்கிறது. 
அதனால், அப்படத்தின் மலையாள பதிப்பில் மோகன்லாலுக்கு ஜோடியாக மாஜி ஹீரோயின் மீனா நடித்திருந்ததால், தமிழிலும் அவரைப்போன்று ஒரு மாஜி நடிகையைதான் நடிக்க வைப்பார்கள் எனறு பல மாஜி ஹீரோயினிகள் வரிந்து கட்டியுள்ளனர். 
 அவர்களில் ஏற்கனவே நடித்த மீனா மட்டுமின்றி நதியா, சிம்ரன் போன்ற நடிகைகளும் இப்போது அப்படத்தை கைப்பற்ற பலத்த முயற்சி எடுத்து வருகின்றனர். உத்தம வில்லனை முடித்து விட்டுத்தானே அந்த படத்தில் கமல் நடிப்பார் என்று முயற்சியை தள்ளிப்போட்டால் வேறு நடிகைகள் வாய்ப்பை கொத்திச்சென்று விடுவார்கள் என்பதால், மேற்படி நடிகைகள் 3 பேருமே தங்கள் பெயரை படப்பட்டியலில் சேர்த்து விட வேண்டும் என்று முட்டி மோதிக்கொண்டு அலைகிறார்கள்.

No comments :

Post a Comment