ரஜினி நடிப்புக்கு முழுக்கா?: பாக்யராஜ் புது தகவல்

No comments
கோச்சடையான்’ படத்துடன் சினிமாவுக்கு ரஜினி முழுக்கு போட யோசிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனை டைரக்டர் பாக்யராஜ் தெரிவித்து உள்ளார். ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். 1975–ல் இப்படம் வந்தது. இது வரை 170–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எந்திரன் படம் 2010–ல் வந்தது. தொடர்ந்து கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்துக்கு பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. 
 இந்த நிலையில்தான் ரஜினி சினிமாவை விட்டு விலக திட்டமிடுவதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாக்யராஜ் அளித்த பேட்டி வருமாறு:– நான் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினேன். அப்போது தமிழ் சினிமாவில் நிறைய இளம் ஹீரோக்கள் வந்து விட்டார்கள்.
 இனி மேல் தொடர்ந்து நான் நடித்து என்ன ஆகப் போகிறது. எனவே கோச்சடையான் படத்தோடு நடிப்பதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். இப்படி அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். இப்போது வரைக்கும் நீங்கள்தான் சூப்பர்ஸ்டார். உங்களுடன் நடிக்க வந்த நிறைய பேர் இப்போது சினிமாவிலேயே இல்லை. இருக்கிற சிலர் கூட சிறிய கேரக்டரில் தான் வருகிறார்கள். உங்கள் நடிப்பை இப்போதும் தமிழ் மக்கள் ரசிகர்கள். சந்தோஷப்படுகிறார்கள். எனவே வேறு மாதிரி நினைக்காதீர்கள். கோச்சடையான் வெளியான பிறகும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றேன். ரஜினி சிரித்தார். இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.

No comments :

Post a Comment