சினிமாவில் சாதிக்க நடிகைகளுக்கு திருமணம் தடையல்ல: சமீரா ரெட்டி

No comments
சினிமாவில் சாதிப்பதற்கு நடிகைகளுக்கு திருமணம் தடையாக இல்லை என்று சமீரா ரெட்டி கூறினார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வர்தேக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கை குறித்து சமீரா ரெட்டி கூறியதாவது:– திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியும். கன்னட படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்த போது, காதல் பற்றிக் கொண்டது. கணவர் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
 நான் சமைப்பதை ருசித்து சாப்பிடுகிறார். திருமணமானதும் நடிகைகளின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும் என்று கருதினேன். எனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது போல் நிகழவில்லை. கரீனா கபூர், ஜூகி சாவ்லா, மாதுரி தீட்சித் போன்றோர் திருமணத்துக்கு பிறகும் சாதிக்கின்றனர். எதிர் காலத்தில் தொழில் அதிபராக திட்டம் உள்ளது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

No comments :

Post a Comment