ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பக்கவாத நோயால் அவதி: 5 வருடங்களாக வீட்டுக்குள் முடங்கினார்

No comments
இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் அசோக்குமார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்காக தேசிய விருது பெற்றார். ஜென்மபூமி என்ற படத்தின் மூலம் 1969ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக அறிமுகமான அசோக்குமார் தென்னிந்திய மொழிகளில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதிரிப்பூக்கள், உல்லாச பறவைகள், காளி, ஜானி, நண்டு, கை கொடுக்கும் கை, பிள்ளை நிலா, கன்னிராசி, நடிகன், சூரியன், மன்னன், ஜீன்ஸ் ஆகியவை முக்கியமான தமிழ் படங்கள். 
டேல்ஸ் ஆப் காமசூத்திரா, கேத்தா ஹை தில் பார் பார் என்ற படங்களை இயக்கினார். இதில் அவர் மகன் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெறாதது அவர் மனதை மிகவும் பாதித்தது. கோவில்பட்டி வீரலட்சுமிதான் அவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்த படம். அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட அசோக்குமார் ஒளிப்பதிவில் இருந்து விலகிக் கொண்டார். 
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் வீல் சேரில்தான் வாழ்கிறார். சமீபத்தில் தனது படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் மகேந்திரன், அசோக்குமாரின் உடல்நிலை குறித்து வருத்தமாக குறிப்பிட்டதுடன் அவரை திரையுலகினர் யாரும் சென்று பார்க்ககூட இல்லை என்றார்.

No comments :

Post a Comment