இறுதி கட்டத்தில் 'ஐ - ஒரு பாடல் மட்டுமே பாக்கி!

No comments
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன், ராம்குமார் நடிக்கும் படம் ஐ. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்காக விக்ரம் துரும்பாய் இளைத்தும், வெயிட் போட்டும் பல கெட்அப்களில் நடித்து வருகிறார். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்போது இந்தப் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. எமி ஜாக்சனின் அறிமுக பாடல் காட்சி மட்டுமே படமாக்ககப்பட வேண்டியது இருக்கிறது. 
படம் கோடை விடுமுறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் தனது இணையதளத்தில் எழுதியிருப்பதாவது: ஐ யின் ஏ டூ ஒய் பணிகள் முடிந்து விட்டது. 
பல தடைகளை தாண்டி வந்திருக்கிறேன். அவதார், ஹாபிட், லார்ட் ஆப் ரிங்ஸ் படங்களில் பணியாற்றிய வேட்டா நிறுவனத்தினரின் பணிகளும் முடிந்து விட்டது. எமி ஜாக்சன் பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியது இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்கான புரமோஷனும் பிரமாண்டமாக இருக்க வேண்டும். 
அதனை தயாரிப்பாளர் நல்ல முறையில் செய்வார் என்று கருதுகிறேன். இவ்வாறு ஷங்கர் எழுதியிருக்கிறார்.

No comments :

Post a Comment