லட்சுமி மேனனுக்கு இது தேர்வு காலம்!
லட்சுமிமேனன் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வணிகவியல் சப்ஜெக்ட் எடுத்திருக்கிறார். பிளஸ் 1 ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை தவிர்த்து விட்டு பத்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். தற்போது ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது: எங்க பள்ளி ரொம்ப கண்டிப்பானது. நான் நிறைய நாள் லீவு போட்டதை அனுமதிச்சிருக்காங்க. அவுங்க போட்டிருக்கிற ஒரே கண்டிஷன் தேர்வில் நல்ல மார்க் எடுக்கணுங்றதுதான்.
அதுக்காக ஷூட்டிங் நேரத்துல கூட கேரவன்ல உட்கார்ந்து படிச்சேன். இன்னிக்கு ஆங்கில தேர்வு நல்லா எழுதியிருக்கேன். அடுத்து இன்னும் 5 எக்ஸாம் இருக்கு. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் லீவு இருக்கு. அந்த லீவுல தேர்வுக்கு தயாராகிடுவேன்.
இந்த வருஷம் பிளஸ்1 தான் சமாளிச்சுடுவேன். அடுத்த வருஷம் பிளஸ் 2 படம் எதுவும் ஒத்துக்காம 6 மாசம் படிப்புக்கு ஒதுக்கிடுவேன். இப்பவும் சொல்றேன், எனக்கு நடிப்பை விட படிப்புதான் ரொம்ப முக்கியம் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment