கன்னடம் வழியாக தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சாஸ்திரி!
தெலுங்கில் அல்லரி நரேஷ், பர்ஷானா நடிப்பில் வெளிவந்த சீமா சாஸ்திரி அங்கு சூப்பர் ஹிட்டானது. அதை அப்படியே கன்னடத்தில் சூப்பர் சாஸ்திரி என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். கன்னட பதிப்பில் பிரஜ்வால் தேவராஜும், ஹரிப்ரியாவும் நடித்தார்கள். ரவி-ராஜா என்ற இரட்டையர்கள் இயக்கினார்கள். இவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
இப்போது சூப்பர் சாஸ்திரியை தமிழில் டப் செய்கிறார்கள்.
சுப்பிரமணிய சாஸ்திரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதை பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தின் கதை மாதிரிதான்.
ஆச்சாரமான சாஸ்திரி வீட்டு பெண்ணை காதலிப்பார் ஹீரோ. கண்டிப்பான குடும்பம் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறது. இதை அறிந்து சாஸ்திரி வீட்டு மகனாக மாறி ஹீரோ அந்த வீட்டுக்குள் நுழைந்து அனைவரது அன்பையும், கவனத்தையும பெற்று காதலியை கைபிடிக்கிற கதை. முழு நீள காமெடிப் படம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment