ரீமாவுக்கு தோல் கொடுத்த கணவர்
வாய்ப்பிழந்து நின்ற ரீமா கல்லிங்கலுக்கு அவரது கணவர் தோல் கொடுத்து தூக்கியுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த ரீமா கல்லிங்கலை இயக்குனர் ஆஷிக் அபு காதலித்து மணந்தார்.
திருமணத்துக்கு பிறகும் ரீமா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்மூட்டி நடிக்கும் புதிய படமொன்றில் ஹீரோயினாக நடிக்க தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் சில நாட்களிலேயே அவரை அப்பட இயக்குனர் வேணு நீக்கிவிட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி ரீமாவுக்கு பதிலாக அபர்ணா கோபிநாத் தெரிவு செய்யப்பட்டார்.
மம்மூட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டதால் ரீமா கல்லிங்கல் சோகத்துடன் இருந்ததால், மனைவியின் மனம் நோகக்கூடாது என்பதற்காக தான் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க அவரை தெரிவு செய்துவிட்டார் ஆஷிக் அபு.
இதை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர், நான் இயக்கும் அடுத்த படத்தில் ரீமா கல்லிங்கல் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment