விக்ரமுடன் இணையும் ஹன்சிகா

No comments
விக்ரமுடன் ஜோடி சேரவிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. ஷங்கர் இயக்கத்தில் விகரம் நடிக்கும் 'ஐ' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து 'தில்', 'தூள்' என்று இரண்டு பெரிய ஹிட் படங்களை தனக்குத் தந்த தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். படத்துக்கு 'ராஸ்கல்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இதில் த்ரிஷா அல்லது ஹன்சிகா ஆகிய இருவரில் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் படக்குழு இருந்தது. தற்போது விக்ரமுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.

No comments :

Post a Comment