குலாப் ஜாமுனை அபேஸ் பண்ணிய லட்டு நடிகை விசாகா சிங்!
சந்தானம்-சேது-பவர்ஸ்டார் ஆகியோர் நாயகர்களாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விசாகா சிங். மும்பை நடிகையான இவருக்கு அந்த படம் ஹிட்டாக அமைந்தபோதும் புதிதாக படமேதும் கிடைக்கவில்லை. அதனால் அதே சந்தானம்-சேது மீண்டும் இணைந்துள்ள வாலிபராஜா படத்திற்கு மீண்டும் அவரை நாயகியாக்கி உள்ளனர்.
இப்படத்தில் மனநல மருத்துவராக இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடித்து வருகிறார் சந்தானம். மேலும், இப்படத்திலும் விசாகா சிங்கை யார் கேட்ச் பண்ணுவது என்ற போட்டிதான் அவர்களுக்குள் ஜாலியாக கதையாக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இப்படத்துக்காக விசாகா சிங் குலாப் ஜாமுன் சாப்பிடுவது போன்று ஒரு காட்சியை படமாக்கினார்களாம். ஆனால், காட்சி பல டேக் வாங்கிக்கொண்டிருக்க, விசாகாவோ மொத்த குலாப் ஜாமுனையும் ஒவ்வொன்றாக சாப்பிட்டு காலி பண்ணி விட்டாராம்.
அதையடுத்து, புதிதாக வாங்கி வந்துதான் டேக்கை தொடர்ந்தார்களாம்.
இதையடுத்து, வெயிட் போடும் என்பதற்காக நடிகைகள் இதுபோன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட மாட்டார்களே? என்று விசாகா சிங்கிடம் கேட்டதற்கு, அது மற்றவர்களுக்கு.
என்னைப்பொறுத்தவரை குலாப் ஜாமுன், ஜாங்கரி என இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது. அதனால் நான் இந்த மாதிரி அயிட்டங்களை சாப்பிடாமல் விட்டால்தான் என் உடம்புக்கு கேடாகிவிடும். ஆனால் குலாப் ஜாமுன் போன்ற உணவுகளை சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமுடன் இருப்பேன்.
என் உடம்பும் வெயிட் போடாது என்று சொன்னாராம் விசாகா.
அவரது இந்த பதிலை, டயட்ஸ் கடைபிடிக்கும் நடிகர்-நடிகைகள் பொறாமையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment