இரண்டு வேடங்களில் ஜெய் ஆகாஷ்!

No comments
ஜெய் ஆகாஷ், 'காதலுக்கு கண்ணில்லை' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கெட்ட அப்பனாகவும், நல்ல மகனாகவும் நடிக்கிறார். நிஷா, லலித்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அப்பா ஜெய்ஆகாஷ், தாலிகட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு செல்ல... மகன் ஜெய் ஆகாஷ் அம்மாவை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரியாக்கும் அப்பா மகன் மோதல் கதை. நடிகை ஒய்.இந்த கதையை எழுதியுள்ளார்.
 ஜெய் ஆகாஷ் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முழுவதையும் ஈசியார் ரோட்டில் உள்ள பங்களாக்களில் எடுத்திருக்கிறார்கள். யுகே முரளி இசை அமைத்திருக்கிறார். "இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது. 
நெற்றிக்கண் படத்தில் ரஜினி சார் நடித்த அப்பா மகன் கேரக்டரை மனதில் வைத்து இதில் நடித்திருக்கிறேன். பெண்கள் தனியாக போராடி ஜெயிக்கலாம். நல்ல பிள்ளைகள்தான் பெற்றவர்களின் சொத்து என்கிற மெசேஜை படத்தில் சொல்கிறோம்" என்கிறார் ஜெய் ஆகாஷ்.

No comments :

Post a Comment