கோடை விடுமுறையை குறி வைக்கும் மெகா படங்கள்!

No comments
தமிழ் சினிமாவுக்கு கோடை விடுமுறைகாலம் தான் வசூல்காலம். பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் தாராளமாக சினிமா பார்க்க அனுமதிக்கும் காலம் இதுதான். கோடை விடுமுறையை கழிக்க கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை குறைந்த செலவில் அழைத்து போகும் பொழுதுபோக்கு இடமும் தியேட்டர்தான். அதனால் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பெரிய படங்கள் ஏப்ரல் மே மாதங்களை குறிவைக்கின்றன.
 வருகிற ஏப்ரல், மேயில் ரசிகர்களுக்கு பிரமாண்ட சினிமா விருந்துகள் காத்திருக்கிறது. ரஜினி நடித்த கோச்சடையான், விக்ரம், ஷங்கர் இணைப்பில் 100 கோடி செலவில் உருவாகி உள்ள ஐ, வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ட்ரி கொடுக்கிற தெனாலிராமன். 
வசந்தபாலன் உருவாக்கி வரும் பீரியட் பிலிமான காவியத் தலைவன், சூதுகவ்வும் இயக்குனரின் இரண்டாவது படமான ஜிகிர்தண்டா, விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன். கமலின் விஸ்வரூபம் 2 ஆகியவை கோடை விடுமுறையை குறி வைத்திருக்கின்றன. மக்களுக்கு எந்த படம் பிடிக்குதோ அந்த படத்துக்கு வசூலை அள்ளிக் கொடுக்க இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment