தனுசுடன் ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால்!

No comments
காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் பிரபலமானவர் பாலாஜி மோகன். குறும்படத்திலிருந்து நெடும் படத்திற்கு வந்திருப்பவர். தற்போது வாயைமூடி பேசுவோம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மம்முட்டி மகன் துல்கர், நஸ்ரியா நடிக்கிறார்கள். இது ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோ. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தனுஷ், காஜல் அகர்வால் இணையும் முதல் படம் இது. இதனை உறுதிப்படுத்திய பாலாஜி மோகன் இதுபற்றி மேலும் கூறியதாவது: "எனக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்கள் என்று தனுஷ் கூறியிருந்தார். அவரை மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிவிட்டேன்.
 வித்தியாசமான காதல் கதை என்பதை மட்டும்தான் இப்போதைக்கு சொல்ல முடியும். வாயை மூடி பேசுவோம் பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகு இந்தக் கதையை இன்னும் மெருகேற்றும் பணிகளை துவங்க இருக்கிறேன். தனுசும் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்து விட்டு வரவேண்டும்" என்றார் பாலாஜி மோகன்.

No comments :

Post a Comment