பேஸ்புக்கில் ஒரு கோடி லைக்குகளை எட்டினார் ஸ்ரேயா கோஷல்!

No comments
இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். வங்க தேசத்தில் பிறந்த ஸ்ரேயா தமிழ் உள்பட இந்திய மொழிகள் அனைத்திலும் கடந்த 11 வருடங்களாக பாடி வருகிறார். தேவதாஸ் இந்திப் படம்தான் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. பணத்துக்காவும், புகழுக்காகவும் பாடாமல் ஆத்ம திருப்திக்காக பாடும் பாடகிகளில் ஸ்ரேயாவும் ஒருவர். 11 ஆண்டுகளில், 150க்கும் குறைவான பாடல்களையே பாடியுள்ளார். அழகிய தோற்றமும், குரலும் கொண்ட ஸ்ரேயாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார். அவரது பேஸ்புக் லைக் சமீபத்தில் ஒரு கோடியை தொட்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஒரு கோடி லைக்குகளை தொட்ட ஒரு சிலரில் ஸ்ரேயாவும் இணைந்திருக்கிறார். 
அவரது டுவிட்டரை 27 லட்சம் பேர் ஃபாலோஅப் செய்கிறார்கள். ஸ்ரேயா இதுவரை தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார். அத்தனையுமே ஹிட். பாடல் பாடுவதற்கு அதிகம் சம்பளம் பெறுபவர்களின் பட்டியலிலும் ஸ்ரேயாவுக்கு இடம் உண்டு. 
 மேற்வங்கத்தில் பிறந்தாலும் அவருக்கு தென்னிந்திய பெண்ணின் சாயல் இருப்பதால் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சி செய்தனர். குறிப்பாக இயக்குனர் வசந்த் அவருக்கென்று இசை தொடர்பான ஸ்கிரிப்டை வைத்துக் கொண்டு கேட்டார். தனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். அண்மையில் தனது 30வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார் ஸ்ரேயா கோஷல்.

No comments :

Post a Comment