நெகடிவ் ரோலில் அசத்தும் அஞ்சான்
சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் என்பது தெரிந்து விடயம், ஆனால் தெரியாத ஒரு புதிய தகவல் வெளிவந்து இருக்கிறது. அதாவது சூர்யா இப்படத்தில் ஒரு புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் அல்லவா, அதற்கு நேர் எதிராக இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறதாம்.
அந்த கதாபாத்திரம் சூர்யாவின் தோற்றத்துக்கு இன்னும் ஒரு புது விதமான முடி திருத்தத்தையும், தாடியையும் இன்றைய இளைஞர்களுக்கு கவரும் விதத்தில் வெளியிட உள்ளார்.
மேலும் படத்தை பற்றி லிங்குசாமி கூறுகையில், சூர்யா இப்படத்தில் மும்பையில் வாழும் தென் இந்தியன், இதில் சூர்யாவை ஒரு நல்லவன் கலந்த கெட்டவனாக இப்படத்தில் காண்பித்துள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார்.
சூர்யாவின் ரசிகர்களுக்கு இப்படம் செம ட்ரீட்டாகவும் மற்றும் குடும்பத்தோடு பார்க்க கூடிய ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment