என் தந்தை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை! - ஐஸ்வர்யா தனுஷ்
ஒரு காலத்தில் ரஜினி தமிழக அரசியலில் இறங்கி பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர் நடித்த படங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரான அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றன. அதோடு, சில கட்சிகளுக்கு ஆதரவாகவும் சின்னத்திரைகளில் தோன்றி அவர் பிரசாரமும் செய்து வந்தார். அதனால் ரஜினி விரைவில் எம்ஜிஆர் பாணியில் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், காலசூழ்நிலை ரஜினியை மாற்றி விட்டது. ராணா என்ற படத்தில் நடிப்பதற்கு பூஜை போடப்பட்ட அன்று திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று விட்டு திரும்பினார்.
அதன்பிறகு அரசியலைப்பற்றி சாதாரணமாக கருத்து சொல்வதைகூட தவிர்த்து வருகிறார் ரஜினி.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, என் தந்தை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் என்றென்றும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும். அதுவே எனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment