தியேட்டர்களுக்கு எச்சரிக்கை! வடிவேலு அதிர்ச்சி!!
காமெடியை செய்தோமா காசு பார்த்தோமா என்பதில்லாமல், அரசியல்வாதிகளுடன் மோதி ஆடடம் கண்டு போனார் வடிவேலு. அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் வனவாசம் போயிருந்தவர், மறுபடியும் வந்து ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். படம் தொடங்கியபோது படப்பிடிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டபோதும் பின்னர், சத்தமில்லாமல் படப்பிடிப்பை நகர்த்தினர்.
இந்நிலையில், தற்போது படப்பிடிப்பை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் பிசியாகியுள்ளனர்.
இப்படத்தில் ஏற்கனவே தான் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப்போன்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு. படத்தை சித்திரை மாதம் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோடை விடுமுறையில் கோச்சடையான், விஸ்வரூபம்-2, நான் சிகப்பு மனிதன், மான்கராத்தே போன்ற மெகா படங்களும் திரைக்கு வருவதால், வடிவேலு படத்துக்காகவும் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகள் நடக்கிறது.
ஆனால், அவர் படத்தை திரையிடயிருந்த சில தியேட்டர்காரர்களுக்கு எச்சரிக்கைகள் சென்று கொண்டிருக்கிறதாம்.
இதனால், இது தேர்தல் நேரம். தன்னை கவனிக்க அரசியல்வாதிகளுக்கு நேரம் இருக்காது என்று நினைத்திருந்த புயல் காமெடியன், இந்த எச்சரிக்கை செய்தியை கேட்டதில் இருந்து மிரண்டு போயிருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment