பிந்து மாதவியின் காக்டெயில் நடிப்பு!

No comments
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா படங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பிந்து மாதவி நடித்த படங்கள் வராததால் அவரது அபிமானத்திற்குரிய ரசிகர்கள் ரொம்பவே மனசொடிந்து விட்டார்களாம். இப்படியெல்லாம் இடைவெளி கொடுக்கக்கூடாது. வருடத்திற்கு 4 படங்களிலாவது நடித்து எங்களைப்போன்ற ரசிகர்களை உங்களது காக்டெயில் நடிப்பினால் கிறங்கடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்களாம். 
 அதென்ன காக்டெயில்? என்று அவர்களிடம் பிந்து மாதவி கேட்டதற்கு, மற்றவர்களுக்கெல்லாம் டாஸ்மாக்கில்தான் காக்டெயில் சரக்குகள் இருக்கிறது. ஆனால் எங்களைப்போன்றோருக்கோ உங்களது கண்கள்தான் போதை தரக்கூடிய காக்டெயில் டாஸ்மாக் கூடவே சைடிசாட்டம் கொஞ்சம் கவர்ச்சி என்கிறார்களாம். ரசிகர்களுக்கு தன் மீது இருக்கிற மயக்கத்தை இதன்வாயிலாக தெரிந்து கொண்ட பிந்துமாதவி, இனி அவர்களை மயக்கும் காக்டெயில் நடிகையாக படத்துக்குப்படம் உருவெடுக்கப்போகிறாராம்.
 இதனால், தற்போது நடித்து வரும் ஒரு கன்னியும் நாலு களவாணிகளும், கலக்குறே சந்துரு, ஆகிய படங்களில் இதை அமுல்படுத்தியுள்ள பிந்து மாதவி, கவர்ச்சிகரமான காக்டெயில் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பாக, ஒரு சரியான ஒத்திகையையும் பார்த்துவிட்டே கேமரா முன்பு கவர்ச்சி தரிசனம் கொடுக்கிறாராம்.

No comments :

Post a Comment