தோல்வி அதிர்ச்சியால் சம்பளத்தை குறைத்த நயன்தாரா!
இரண்டாவது இன்னிங்சில் அஜீத்துடன் நயன்தாரா ஆரம்பம் படத்துக்காக கமிட்டானதை ஆரம்பத்தில் யாருமே நம்பவில்லை. ஆனால், பின்னர் அந்த செய்தியை மேற்படி பட நிறுவனமே உறுதிபடுத்தியபோது ஆச்சர்யத்தில் கோலிவுட் நடிகைகள் வாயை பிழந்தனர். தல அஜீத்துடன் நடிப்பதற்கு பாலிவுட் இளசுகளே காத்துக்கொண்டிருக்க, முதுமைதட்டி விட்ட நயன்தாராவை ஜோடியாக்கியிருக்கிறாரே என்றும் அம்மணிகள் ஆளாலுக்கு கருத்து பரிமாரிக்கொண்டனர்.
அப்படி பலவிதமான விமர்சனங்களோடு மறுபிரவேசம் செய்த நயன்தாரா, அதையடுத்து ஆர்யாவுடன் ராஜா ராணி படத்திலும் ஒப்பந்தமானார். அப்படி அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால், நயன்தாராவுடன் ஜோடி சேருவதற்கு பல முன்னணி ஹீரோக்கள் முண்டியடித்து புக் பண்ணினர். இதனால் ஒரு கோடியில் இருந்த அவரது படக்கூலியும் 2 கோடியாக எகிறியது.
இந்த நிலையில், அடுத்து வித்யாபாலன் ரேஞ்சுக்கு இந்திய அளவில் ஒரு பிரபல நடிகையாகி விட வேண்டும் என்று திட்டம் தீட்டத் தொடங்கினார் நயன்தாரா. ஆனால் இந்த நேரத்தில் சமீபத்தில் அவர் நடித்த படம் பெரியளவில் போகாததால் நயன்தாராவுக்கு முதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால், படத்துக்குப்படம் படக்கூலியை உயர்த்திக்கொண்டே வந்த நயன்தாரா, இப்போது புதிதாக கமிட்டாகும் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை கணிசமான அளவு குறைத்து கொண்டு வருகிறார். தோல்வி காரணமாக தன் மீது படாதிபதிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாராம் நயன்தாரா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment