மழையில் குளிப்பாட்டிய டைரக்டரிடம் எக்ஸ்ட்ரா கூலி கேட்ட மோனிகா!

No comments
அழகி படத்தில் நடித்த மோனிகாவுக்கு சினிமாவில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதனால்தான் குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த அவர், சிலந்தி படத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தவர், நடு ராத்திரியில் கவர்ச்சிக்குளியல் போட்டு, இளவட்ட ரசிகர்களின் நெஞ்சங்களில் மின்சாரத்தீயை மூட்டினார். ஆனால், அந்த படத்தில் ஓவர்டோஸ் கொடுத்ததால், அதன்பிறகு மோனிகாவை, கவர்ச்சி பாம் ஷகீலா ரேஞ்சுக்கு முழுநேர கவர்ச்சி சேவை புரிய தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலிருந்தும் படாதிபதிகள் சூட்கேஸ்களும் மோனிகாவை முற்றுகையிட்டனர். 
அவர்களின் நோக்கத்தை தெரிந்து கொண்ட மோனிகா, இந்த ரூட்டெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. அதனால் இதுவே முதலும் கடைசியாக நான் நடித்த கவர்ச்சி படமாக இருந்து விட்டு போகட்டும் என்று சொல்லி, வந்த வாய்ப்புகளை தட்டிக்கழித்து விட்டார். 
 அப்படி பல ஆண்டுகளாக திறந்த கவர்ச்சி கதவுகளை இறுக மூடிக்கொண்ட மோனிகா இப்போது நதிகள் நனைவதில்லை படத்துக்காக மீண்டும் திறந்து விட்டுள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக புதுமுக நாயகனுடன் கவர்ச்சிக்குளியல் போட்டிருக்கிறார். ஆனால், ஒரு நாள்தான் மழையில் குளிக்க வைப்பேன் என்று சொன்ன டைரக்டர், குளிர் ஜூரமே வரும் அளவுக்கு 3 நாட்களாக மோனிகாவை நனைத்து எடுத்து விட்டாராம். இதனால் கடுப்பான மோனிகா, பேசினதைவிட எக்ஸ்ட்ராவாக இரண்டு நாட்கள் அதிகமாக குளித்திருக்கிறேன். 
அதனால் எனக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் தந்தால்தான் குளியலை தொடருவேன் என்று பாதி குளியலோடு கரையேறி விட்டாராம். இதையடுத்து, நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைக்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வந்த பிறகுதான், மறுபடியும் தனது கவர்ச்சிக் குளியலை தொடர்ந்தாராம் மோனிகா.

No comments :

Post a Comment