ரியல் ஹீரோவான புரோட்டா சூரி!

No comments
சாதாரணமாக சினிமாவில் ஹீரோக்கள்தான் ஆபத்தில் இருப்பவர்களை பாய்ந்து சென்று காப்பாற்றுவது போல் நடிப்பார்கள். ஆனால், இங்கே நிஜத்தில் ஒரு காமெடியன் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று இன்னொரு காமெடியனை காப்பாற்றியிருக்கிறார். யார் அந்த ரியல் ஹீரோ என்கிறீர்களா? நம்ம புரோட்டா சூரிதாங்க அந்த ரியல் ஹீரோ. அவர் ஹீரோவான கதை எப்படின்னா? நேற்று முன்தினம் காலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ஏரிக்கரையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர்கள் விமல், தம்பி ராமைய்யா, சூரி உள்பட பலரும் காரில் சென்று கொண்டிருந்தனர். 
ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தபோது, எதையோ செக் பண்ணுவதற்காக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினாராம் டிரைவர், அவரையடுத்து விமல், சூரி ஆகியோரும் காரில் இருந்து இறங்கி ஏரியின் அழகை ரசித்துக்கொண்டு நின்றார்களாம். ஆனால் அந்த நேரம் பார்த்து, கார் மெல்ல நகர்ந்து ஏரிக்குள் சென்றிருக்கிறது. 
இதைப்பார்த்து காருக்குள் இருந்த தம்பி ராமைய்யா அலறினாராம். அதையடுத்து, காரை கையால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம் என்பதால் சட்டென்று ஓடிச்சென்று ஒரு கல்லை எடுத்து வந்து, கார் டயருக்கு முன்னாடி போட்டு காரை நிறுத்தி விட்டாராம் சூரி. அவரது இந்த புத்திசாலித்தனத்தால் தம்பி ராமைய்யாவோடு ஏரிக்குள் சென்று விபத்து ஏற்படயிருந்த கார் தப்பியிருக்கிறது. முக்கியமாக தம்பி ராமைய்யா தப்பியிருக்கிறார். 
இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி ஓடிவந்த தம்பி ராமைய்யா, என் உயிரை காப்பாத்திட்டே சூரி என்று அவரை கட்டித்தழுவிக்கொண்டாராம். அதோடு, சினிமாவுல காமெடியனா இருந்தாலும், நிஜத்துல என்னைப்பொறுத்தவரை சூரிதான் ஹீரோ என்று யூனிட்டாரிடம் சொல்லி சூரியை பாராட்டினாராம்.

No comments :

Post a Comment