பேபி சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!

No comments
சினிமாவைப்பொறுத்தவரை ஒரே படத்தோடு காணாமல் போனவர்களும் உண்டு, ஒரே படத்தோடு ஓகோவென்று புகழ் பெற்றவர்களும் உண்டு. அந்த வகையில், விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமன் மகளாக நடித்த பேபி சாரா, அந்த ஒரே படத்தில் தனது இயல்பான நடிப்பால் பேசப்பட்டவர். ஆனபோதும், அதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு பெறவில்லை. தொடர்ந்து விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தவரை, மீண்டும் தான் இயக்கும் சைவம் படத்தில் லீடு ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் விஜய்.
 தாத்தா-பாட்டி-பேத்தி ஆகியோருக்கிடையே நடக்கும் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் சாராவின் நடிப்பு அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும். அந்த அளவுக்கு தெய்வத்திருமகள் படத்தை விடவும், ஆச்சர்யப்படும் வகையில் இயல்பாக நடித்திருப்பதாகவும் கூறும் இயக்குனர் விஜய், சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறாராம். 
ஆனால், சாராவைப்பொறுத்தவரை இது குறைவான சம்பளம்தானாம். ஏனென்றால் அவர் விளம்பர படங்களில நடிக்க ஒரு நாளைக்கு 2 லட்சம் வாங்கி வருகிறாராம். அதேசமயம் டைரக்டர் விஜய் தன்னை தமிழில் அறிமுகம் செய்தவர் என்பதால், இப்படத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ள சாராதரப்பு, அடுத்து புக்காகும் படங்களில் 2 லட்சம் சம்பளம் கேட்பாராம்.

No comments :

Post a Comment