கிருஷ்ண தேவராயராக நடிக்க கூடாது: வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம்
காமெடி நடிகர் வடிவேலு கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
‘ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.
இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்தார். காமெடியுடன் சரித்திர கதையம்சத்தில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதே சாயலில் ‘தெனாலி ராமன்’ படத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.
இதில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு நடித்து இருப்பதாகவும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் தமிழ்நாடு தெலுகு மக்கள் பேரவை கண்டித்து உள்ளது. இது குறித்து அப்பேரவையின் மாநில தலைவர் பாலகுரு சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
‘ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவு படுத்துவது போல் வடிவேலு சில காட்சிகளில் நடித்து இருப்பதாக தெரிய வந்தது.
வடிவேலு செயல் கிருஷ்ண தேவராயரையும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவுபடுத்துவது ஆகும்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வடிவேலு, படத்தின் டைரக்டர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் போன்றோருக்கு கடிதம் எழுதி உள்ளோம். படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தணிக்கை குழுவுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். இதையும் மீறி படத்தை வெளியிட முயன்றால் வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment