மணிரத்னம் படத்தில் அசின், சுருதி
மணிரத்னம் இயக்கும் புதுப்படத்தில் அசின், சுருதிஹாசன் நடிக்கின்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கதாநாயகர்களாக நாகார்ஜுனா, மகேஷ்பாபு நடிக்கின்றனர். நாயகிகளாக நடிக்க ஐஸ்வர்யாராய், சுருதிஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
தற்போது ஐஸ்வர்யாராய்க்கு பதில் அசினை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடிக்கிறார். ஏற்கனவே நாகார்ஜுனாவுடன் ‘சிவமணி’ என்ற படத்தில் அசின் நடித்துள்ளார். பூரி ஜகன்னாத் அப்படத்தை இயக்கினார். இப்படம் சராசரியாக ஓடியது. இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
அசின் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். அங்கு அவருக்கு மார்க்கெட் இப்போது சரியாக இல்லை. இந்த படம் மூலம் தென்னிந்திய மொழி படங்களில் இன்னொரு ரவுண்ட் வரும் முடிவில் இருக்கிறார்.
மகேஷ்பாபு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment